எந்த நிலையிலும் நிதானத்தை இழக்காத துலாம் ராசிக்கார்களே பிறக்க போகும் 2025ம் ஆண்டு உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாக இருக்க போகிறது. இதுவரை தடைபட்ட நல்ல விஷயங்கள் இனி ஒவ்வொன்றாக நடக்க துவங்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆனால் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சிலருக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் தேடி வர வாய்ப்புள்ளது. திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கிகளும் கைக்கு வரும்.

எதிலும் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் நேர்மையாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள், பிரச்சனைகள் நீங்கி நிம்மதியான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். கடன்களை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். உணவு பழக்கங்களில் கட்டுப்பாடுகள் அவசியம். பெண்கள் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பீர்கள். வீட்டு பெரியோர்களின் ஆதரவு இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலில் வளர்ச்சி இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம். அரசுத்துறையில் அனுகூலம் ஏற்படும். பணத்தை கையாளுவதில் கவனம் வேண்டும். அரசியலில் ஆதரவு அதிகரிக்கும். பொது இடங்களில் பேசம் போது நிதானமாக இருக்க வேண்டும். கலைஞர்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்.வாகன பயணத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அடி வயிறு, கழிவு உறுப்புகளில் பாதிப்பு, சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : குழப்பங்கள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க நடராஜரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபட்டு வருவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}