சென்னை: மணக்கோலத்தில் வந்து ஓட்டுப் போட்ட மணமக்கள்.. மாலையும் கழுத்துமாக வந்து ஓட்டுப் போட்ட புது மாப்பிள்ளை.. மணக்கோலம் கலையாத நிலையில் வாக்களித்த மணப்பெண்.. என்றெல்லாம் வழக்கமாக செய்தி வரும்.. ஆனால் இன்று நடைபெறும் தேர்தலின்போது அப்படி ஒரு செய்தியும் வரவில்லை.. ஏன் தெரியுமா.. காரணம் இருக்குங்க!
பொதுவாகவே வளைகாப்பு, கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும் நாளில் அரசு தேர்வுகள் வருவது வழக்கம். அந்த நேரத்தில் திருமணமோ வளைகாப்பையோ அதை முடித்த கையோடு தேர்வு எழுதுவதற்கு ஓடி வருவார்கள்.. தாலி கட்டிய கையோடு மாலையும் கழுத்துமாக பலரும் வருவதைப் பார்த்திருப்போம்.. இதுகுறித்த செய்திகள் ஏகப்பட்டது அந்த சமயத்தில் வரும்.

பரவாயில்லையே திருமணத்தை முடித்த கையோடு கடமையாக வந்து விட்டார்களே என்று பலர் பாராட்டுவர்.. சிலரோ, ஏன் அந்த டிரஸ்ஸை மாற்றி விட்டு வந்திருக்கலாமே என்று கிண்டலாக கேட்பதும் உண்டு. ஆனால் இன்றைய தேர்தலின்போது அப்படியெல்லாம் எதுவும் நடந்தது போல தெரியவில்லை. இதற்குக் காரணம் தற்போது நடந்து வருவது சித்திரை மாதம் என்பதாலோ என்னவோ. சித்திரை மாதத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தமாட்டார்கள். எனவேதான் இன்று நடந்த வாக்குப் பதிவின்போது மாலையும் கழுத்துமாக யாரும் ஓட்டுப் போட வரவில்லையா என்று தெரியவில்லை.
ஆனால் வட இந்தியாவில், சில ஜோடிகள் கல்யாணம் முடித்த கையோடு வந்து வாக்களித்த சுவாரஸ்யம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அப்படி ஒரு ஜோடி வந்து ஓட்டுப் போட்டுள்ளது. உதம்பூரைச் சேர்ந்த ராதிகா சர்மாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. இன்று மணக்கோலத்திலேயே தனது கணவருடன் வந்து அவர் வாக்களித்து விட்டுச் சென்றார்.
வழக்கமாக சித்திரை மாதத்தில் திருமணம், காது குத்து, வளைகாப்பு என பெரும்பாலும் வைக்க மாட்டார்கள். சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இந்த மாதத்திலும் அதைச் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ மணக்கோலத்தில் வந்த மாப்பிள்ளை பொண்ணு சுவாரஸ்யச் செய்தி இந்த வாட்டி மிஸ் ஆகி விட்டது.. மக்களுக்கு ஏமாற்றம்ப்பா!
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}