சிவகாசி: சிவகாசியில் தங்களது சகோதரியை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இளைஞரை பெண்ணின் சகோதரர் வெட்டிக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருடைய மகன் கார்த்திக் பாண்டி. 26 வயதான இவர் சிவகாசியில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். சிவகாசி வம்பிழுத்தான் மூக்குப்பகுதியை சேர்ந்த நந்தினி என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கார்த்திக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. இவர்கள் காதலிக்கும் விஷயத்தை வீட்டில் தெரிவிக்கவே, இரு விட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் பாண்டி நந்தினியை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு அய்யம்பட்டியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். நந்தினி சிவகாசி அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். வேலை முடித்து வீடு திரும்ப உள்ள நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் அங்கு வந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மூன்று பேர் கார்த்திகை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இதில் கார்த்திக் கீழே விழுந்து, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நந்தினியின் சகோதரர் பாலமுருகன், நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த பாலமுருகன், தனபாலன், சிவா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}