சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு வரும் செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதம் சுங்கவரி கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த கட்டண உயர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் சுங்கவரி கட்டணம் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட வேண்டிய சுங்கவரி கட்டணம் ஜூன் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளது. அந்த வரிசையில் கார், பஸ், வேன் மற்றும் கனரா வாகனங்களுக்கான வகையைப் பொறுத்து சுங்க வரி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கார், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூபாய் 5 வரை உயர்கிறது.அதேபோல் ட்ரக், பஸ், மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் ரூபாய் 150 வரை உயர்கிறது.
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீ பெரும்புதூர் வாலாஜா, உள்ளிட்ட 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}