சென்னை: மதுரை விமான நிலையம் 24 மணி சேவையை தொடங்கியுள்ளது. இதையடுத்து மதுரை-சென்னை இடையேயான விமான சேவை டிசம்பர் 20ம் தேதி முதல் இரவு நேரங்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு , கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக மாற்றி அமைத்தது. ஆனால், தற்போது வரை எந்த நிறுவனமும் இரவு நேரப் பயணத்திற்கு முன்வராமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு, இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் இரவு நேர சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ம் தேதி முதல் இந்த இரவு நேர சேவை தொடங்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை வந்தடைகிறது. அதே போல மறுமார்க்கமாக இரவு 10.45 மணிக்கு பறப்பட்டு இரவு 12.05 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னை - மதுரை இடையே 10 விமான சேவைகள் உள்ளன. இதில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருகிறது. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் வெற்றிகரமாக இயங்கும் பட்சத்தில் அடுத்த கட்டமாக இது சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு. சர்வதேச விமானங்களும் இங்கு இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
தற்போது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு்ச செல்ல திருச்சி அல்லது சென்னைக்குப் பயணிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சி ஆகியவை மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}