சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், அந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு முழவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து, சென்னை நகரையே குளுமையாக்கி விட்டது. இந்த மழை தொடர்ந்து பெய்து, சென்னை மக்களை வெயிலின் கொடுமையில் இருந்து காப்பாற்றுமா என்பது தான் தற்போது பலரின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம், எல்லோ அலார்ட் விட்டு குட் நியூஸ் சொல்லி உள்ளது. சென்னை வானிலை மையமும், தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இனி வரும் நாட்கள் மழை பெய்வதற்கு வாய்ப்பு கிடையாது. அதே சமயம் வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுதாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் 40 முதல் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளில் 80 முதல் 90 மி.மீ., வரை மழை பதிவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. நகரில் சில பகுதிகளில் அதிகாலையிலும் கூட சாரல் மழை பெய்தது. இன்றும் சென்னையில் மிதமான மழை தொடரும் என சொல்லப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சொல்லப்படுகிறது.
வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இவ்வளவு வெயில் சென்னையில் இருக்காது. ஏன் தமிழ்நாட்டிலும் கூட செப்டம்பரில் பெரிய அளவில் வெயில் இருக்காது. ஆனால் இந்த முறை வெயில் நடு மண்டையில் கோடாலியால் அடிப்பது போல கொடூரமாக அடித்து கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது வட மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்திருப்பது மக்களை மகிழ்வித்துள்ளது.
செப்டம்பர் 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழக மக்களை வாட்டி வதைத்த கடும் வெயிலில் இருந்து விடுதலை கிடைக்கும் என தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}