சென்னை: நடிகரும், இயக்குனருமான தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குனராக அவதரித்து பவர் பாண்டி, ராயன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அவதரித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களின் காதல், திருமண உறவு போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் என இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
ஜீ.வி பிரகாஷ் இசையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாகவே கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது.இப்பாடலில் பிரியங்கா மோகன் கெஸ்ட் ரோலில் நடனமாடி இருந்தார்.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
அதே மார்ச் 21ஆம் தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என Netflix அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
WHERE TRUST LIVES....
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
{{comments.comment}}