ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19, 20 ஆகிய மூன்று நாட்கள் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று நாட்கள் ஊட்டி, குன்னூருக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவிலும் பகலிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தற்போது குளுமையான சூழ்நிலை அங்கு நிலவி வருவதால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18 , 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதியில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா மாவட்ட அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு மிக கனமழை காரணமாக
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இந்த மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
ஊட்டிக்கு யாரும் வர வேண்டாம் என கூறவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார். கன மழை பெய்தால் மலைச் சாலையில் மண் சரிவு உள்ளிட்டவை ஏற்படலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் இந்த அறிவுறுத்தலை கலெக்டர் விடுத்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}