7வது பட்ஜெட் ஓகேதான்.. ஆனாலும், 2020 சாதனையை முறியடிக்க தவறிய நிர்மலா சீதாராமன்!

Jul 23, 2024,05:03 PM IST

டெல்லி: மத்தியில் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனாலும் இன்றைய அவரது பட்ஜெட் உரையின் நீளம் சற்று குறைவுதான். 2020ம் ஆண்டுதான் அவர் நீண்ட நேரம் பேசி சாதனை படைத்திருந்தார்.


தொடர்ச்சியாக 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறையும், அதிகபட்சமாக 10 முறையும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இன்றுடன் தொடர்ச்சியாக 6 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். 




பட்ஜெட் தாக்கலில் இதுவரையிலும் மிக நீளமான உரை என்றால் அது 2020ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் ஆற்றி உரை என்றே சொல்லலாம். அப்போது அவர் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு பேசினார். இடையில் அவருக்கு சோர்வும் வந்து விட்டது நினைவிருக்கலாம்.


மொரார்ஜி தேசாய்க்கு அடுத்தபடியாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 2வது இடம் பிடித்துள்ளார் ப.சிதம்பரம்.  3வது இடத்தில்  பிரணாப் முகர்ஜி உள்ளார். அவர் 8 முறை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்து 4வது இடம் பிடித்துள்ளார். 


அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்து முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களும் ஆண்கள் தான்.  பெண் நிதியமைசராக இருந்து 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் நிர்மலா சீதாராமன் மட்டுமே.

சமீபத்திய செய்திகள்

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

அதிகம் பார்க்கும் செய்திகள்