டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜூலை 26 ஆம் தேதி காலை டெல்லி செல்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் வரும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இது. இதுவரை இருந்து வந்த மத்திய திட்ட குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிதி ஆயோக் கூட்டம் ஜூலை 27 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் குழுவின் ஒன்பதாவது கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இதில் அனைத்து மாநில முதல்வர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.அதனால் இந்த நிதி ஆயோ க் குழு கூட்டத்திற்கு அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயக்குழு கூட்டத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, நிதி விவகாரம் தொடர்பாக பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது .
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜூலை 26 ஆம் தேதி காலை முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார். இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். 3வது முறையாக பிரதமரான பின்னர் மோடியை முதல் முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}