டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் நிதி ஆயோக். தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு. ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன்படி இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டம் 10வது கூட்டமாகும்.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை கடந்த ஆண்டு புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் இந்தாண்டு கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில், 20 மாநில முதல்வர்களும் 6 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என முதல்வர் சித்தராமையா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}