மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

May 24, 2025,05:52 PM IST

டெல்லி: மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வரி பகிர்வு வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில் முதல் வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.


இந்நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தல் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  முன் வைத்துள்ளார். அவை,




கடந்த 15 ஆவது நிதி குழுவின் பரிந்துரைகள் படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக்கூடிய வரி வருவாய் பங்கினை 41% ஆக உயர்த்தினார்கள். ஆனால் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 சதவீதமாக உயர்த்தப்படுவது தான் முறையானதாக இருக்கும்.


P.M.SHRI திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A.நிதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2024-25 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது. தாமதம் இன்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.


தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்க திட்டம் தேவை. ஆகவே காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும். இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழி பெயர்த்துக் கொள்வார்கள்.




இந்தியாவில் உள்ள நகர்ப்புறங்களில் மேம்பாட்டு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம். சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசர தேவை.  இது போன்ற ஒரு திட்டத்தை விரைவில் மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்