டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், நடப்பு நிதி ஆண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீகிதமாக இருக்கும். வரும் நிதி ஆண்டில் 5.4 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
ரெப்போ வட்டி விகிதத்தில் ஆறாவது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை. தற்போதும் அதே நிலையே தொடர்கிறது. 2024 உலகப் பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. 2024ல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது. தற்போது பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொது கடன் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளை குறைப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}