சென்னை: தங்கம் விலை கடந்த சனிக்கிழமை அன்று உயர்ந்திருந்த இன்று எந்த மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது.
சமீபகாலமாகவே ஏற்ற இறக்கங்கள் அதிகளனில் இருந்து வந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது. கடந்த சனிக்கிழமை கிராமிற்கு ரூ.19 அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ.152 உயர்ந்திருந்தது. நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் நகை விலை வழக்கம் போல எந்த மாற்றமும் இன்றி இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் வந்தக நாளான இன்று நகை விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.

இந்த விலை நிலவரம் வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை திடீர் என்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,685 ரூபாயாக இருந்தது.இது எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,480 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,293 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,344 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,850 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,68,500க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.72,930 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,29,300க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
தங்கம் விலை மாற்றம் இன்றி இருந்து வரும் வேலையில், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.20 காசுகள் அதிகரித்து ரூ.94.70க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 757.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.947 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,470 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.94,700க்கு விற்கப்படுகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}