கோயம்பத்தூர்: எனக்கு முதல்வர் கனவு இல்லை. பெரிய தலைவர்களுடன் சேர்த்து கட்சியை வளர்ப்பது தான் என் வேலை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சிற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட டி.ஜெயக்குமார் அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம் என்று கூறியிருந்தார்.
டி ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக பாஜகவை பொறுத்தவரை என்னை காட்டிலும் முதலமைச்சர் நாற்காலிக்கு பத்து முதல் 15 பேர் பொருத்தமானவர்கள் இருக்கிறார்கள். அ தி.மு.க.வில் இவரை தவிர வேறு யாராவது ஒருவர் முதல்வர் நாற்காலிக்கு பொருத்தமானவர் என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். பா.ஜ.க. வில் சிங்கிள் லீடர் கிடையாது. என்னைப் போலவே பல தலைவர்கள் இருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளுக்கும் பா.ஜ.கவிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பாஜகவில் மட்டும் தான் நிறைய தலைவர் இருக்கிறார்கள்.

மற்ற கட்சிகளில் எல்லாம் ஒருவரை மட்டுமே உட்கார வைத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் அவரை சுற்றி சுற்றி வருகிறார்கள். பதவி ஆசை இருப்பவர்கள் பாஜகவை பார்த்து குற்றம் சாட்ட எந்த தகுதியும் இல்லாதவர்கள். தங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் கொள்கைக்காகவும், மாற்றத்திற்காகவும் தான் இருக்கிறார்கள் தவிர வேறு எதற்காகவும் இல்லை. எனது வேலை எல்லாம் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க வேண்டும். ஆல்ரெடி கட்சியில் இருக்கும் பெரிய தலைவர்களுடன் சேர்ந்து பாஜகவை வளர்ப்பது தான் அண்ணாமலையின் வேலை என்று கூறியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}