சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் லியோ திரைப்படம் இங்கு திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த தியேட்டரையும் சூப்பராக புதுப்பித்து லியோவை நாளை ரிலீஸ் செய்யப் போவதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதே ரோகிணி தியேட்டரில்தான் லியோ டிடைலர் வெளியிடப்பட்டபோது ரசிகர்கள் மோசமாக நடந்து கொண்டு, மொத்த சீட்டுகளையும் கிழித்தெடுத்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம். ரோகிணியில் லியோ ரிலீஸாகாதது, லியோ பட சர்ச்சைகளில் ஒன்றாக சேர்ந்தது. ஆனால் தற்போது ரோகிணியிலும் லியோ வருவதால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம் நாளை ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளிவருகிறது.
தெலுங்கில் இப்படம் வெளிவருவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு அது சரியாகி இப்போது திட்டமிட்டபடி அங்கு வருகிறது. மற்ற மாநிலங்களிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் அடுத்தடுத்து சர்ச்சைகள், முட்டுக்கட்டைகள், இடையூறுகள்.. தொடர் கதையாகி வருகின்றன.
லியோ இசை வெளியீடு கடைசி நேரத்தில் ரத்து, ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை வசனம், சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகள் என பல சர்ச்சைகளில் இப்படம் சிக்கித் தவித்து வந்தது. டிரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ரோகிணி திரையங்கில் உள்ள சீட்டுகளை கிழித்தது. அதனைத் தொடர்ந்து நடனக் கலைஞர்கள் 1300 பேருக்கு ஊதியம் வழங்காமை எனப் பல்வேறு சர்ச்சைகளில் இப்படம் தொடர்ந்து சிக்கி வந்தது.

உச்சகட்டமாக லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில், 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டுக்குப் போய்ப் பார்த்தது. அங்கும் அதற்கு தோல்வியே கிடைத்தது. இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், ஒரு வழியாக நாளை ரிலீஸாகிறது லியோ.
அதேசமயம், சென்னையில் ரோகிணி, வெற்றி உள்ளிட்ட சில தியேட்டர்களில் படம் ரிலீஸாவது தொடர்பாக பது சிக்கல் எழுந்தது. விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை முடியாததால் இங்கு படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரோகிணி தியேட்டர்காரர்கள், படம் ரிலீஸாகாது என்று கூறி போர்டே வைத்து விட்டனர். இதனால் ரசிகர்கள் சோகமாகியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பிரச்சினை தீர்ந்து ரோகிணியிலும் நாளை லியோ ரிலீஸாகிறது. இதுதொடர்பான அறிவிப்பை ரோகிணி தியேட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அது போட்ட டிவீட்டில், "நூறு பஞ்சாயத்தை தீத்தாச்சுடா.. வரலாறு மொத்தம் பிளட் ஆச்சுடா.. அக்ரிமென்ட் சைன்ட். ரோகிணியிலும் லியோ" என்று கூறியுள்ளனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். ரோகிணியிலும் தற்போது லியோ கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}