சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டு திட்டம். அது முடிந்து விட்டது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் அம்மா மினி கிளினிக். பெரிய அளவில் மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் முடிவடைந்து விட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
புதுக்கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு மட்டுமே தற்போது இருக்கிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சனிக்கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் மத்திய அரசு அறிவிப்பிற்கு முன்பே தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கையை ஆரம்பித்து விட்டது.
அம்மா மினி கிளினிக் என்பது ஓராண்டுக்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது. அது முடிந்து விட்டதால் அதை மீண்டும் தொடர முடியாது. அதேசமயம், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையம் என்பது 5 ஆண்டுக்கான திட்டம். இந்த திட்டம் 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றாலும், அதனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}