சென்னை: சென்னையில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது வந்து வந்து வான வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த மழைக்கு ஒரு பிரேக் கிடைத்துள்ளது. இனி அடுத்து ஒரு நாலு நாளைக்கு பெரிதாக மழை இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் ஒரு செய்தியைச் சொல்லியுள்ளார்.
சென்னையில் தென் மேற்குப் பருவ மழைக்காலத்தில் நிறைய மழை கிடைத்து விட்டது. வட கிழக்கு பருவ மழைக்காலத்தில் கிடைப்பது போல நன்றாகவே கிடைத்தது அப்போது. ஆனால் வட கிழக்குப் பருவ மழை இந்த நிமிடம் வரை சென்னைக்கும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கும் பற்றாக்குறைதான்.
அதேசமயம், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மழையார்.. வச்சு செய்து விட்டார். குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அருமையான மழைப் பொழிவு கிடைத்துள்ளது. மத்தியிலும் கூட நல்ல மழை பெய்துள்ளது. அங்கு உபரி மழையாக வட கிழக்குப் பருவ மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே வந்து வான வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த மழை தற்போது நின்றுள்ளது. இனி அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெரிதாக இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். எங்காவது லேசான மழை இருக்கலாம் அல்லது பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியன்று சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கூட மழை இருக்காதாம். எனவே ஹேப்பியாக பட்டாசு வெடித்து தடபுடலாகவே மக்கள் கொண்டாடலாம்.
இன்று... காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யலாம். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் மழை உண்டாம்.
மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கடந்த சில நாட்களாக அங்கு தீவிரமாக இருந்து வந்த மழை தற்போது தணியும்.
இதெல்லாத்தையும் விட்ருவோம்.. நவம்பர் 14ம் தேதி ஒரு காற்றழுத்தத் தாழ்வு உருவாகப் போகிறது. அது பெரிய அளவில் மழையைக் கொண்டு வருமா அல்லது ஏமாற்றுமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
Ok Folks, lets get ready for a very happy Deepavali!
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}