- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: குட் மார்னிங் ஃபிரண்ட்ஸ்.. ரொட்டீன் ஆரம்பிச்சாச்சு.. இந்த வாரம் முழுக்க ஓடணும்.. இடை இடையே மழை வந்து லீவு கிடைச்சா ஹேப்பிதான்.. சரி அதை விடுங்க.. உடம்பு ரொம்ப வெயிட் போட்ருச்சு.. குறைக்க முடியலையேன்னு கவலைப்படறீங்களா.. அதுக்காக நிறைய உணவுப் பழக்கத்தை மாத்திட்டு வர்றீங்களா.. அப்படியே இதையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கங்க.
எண்ணெய் கலக்காத, உடம்புக்கு ரொம்ப நல்லது செய்யக் கூடிய, உடல் எடையைக் குறைக்க்க கூடிய சூப்பரான வெஜிடபிள் சாலட் அவசியம் நீங்க தினசரி எடுத்துக்கணும். வெயிட் லாஸுக்கு இது ரொம்ப அவசியமும் கூட.. சரியா, வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கேரட் -1 (பெரியது - துருவல்)
பீட்ரூட் - 1 துருவல்
நெல்லிக்காய் - அரை துருவியது
எலுமிச்சம்பழம் - அரை
வெள்ளரிக்காய் - ஒன்று சிறியது
பச்சை வேர்கடலை - ஒரு கப் உப்பு போட்டு வேக வைக்கவும்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - தேவைக்கு
பெரிய வெங்காயம் + மல்லித்தழை ஒன்று + சிறிதளவு
செய்முறை
1. பச்சை வேர்கடலை வேக வைக்கவும் . குக்கரில் ஒரு கப் வேர்க்கடலையை சிறிது உப்பு போட்டு நான்கு விசில் விடவும்.
2. பிரஷர் அடங்கியதும் அதனை ஆற விடவும்.
3. கேரட் பீட்ரூட் வெள்ளரிக்காய், நெல்லி ஒன்றன் பின் ஒன்றாக துருவிக் கொள்ளவும்.
4. பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்யவும்.
5. ஒரு செர்விங் பவுலில் துருவிய கேரட் பீட்ரூட் வெள்ளரி நெல்லிக்காய் வேர்க்கடலை பெரிய வெங்காயம் மல்லி தழை சேர்த்து
6. பிறகு ஆப்ஷனல் மிளகுத் தூள், லெமன் ஜூஸ் சேர்த்து சாப்பிடவும்
இதில் எண்ணெய் கிடையாது, பாயில் செய்யவும் இல்லை. இதனால் உடம்புக்கும் நல்லது. எடை குறையவும் இது உதவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
{{comments.comment}}