விர் விர்ர்ர்ர்.. தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. இப்படியே போனா எப்படிப்பா!

Oct 21, 2023,12:49 PM IST

சென்னை: கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை  ஏறத் துவங்கி உள்ளது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


போன மாசம் நல்லா இருந்துச்சு.. விலை ஜம் ஜம்னு இறங்கிட்டே போச்சு.. இதனால் மக்கள் ஹேப்பியாக இருந்தனர். ஆனால் இப்போது விலை உயர்ந்தவாக்கிலேயே இருக்கிறது. இப்படியே போனா எப்படிப்பா.. கொஞ்சம் இறங்கி வாயேன் என்று தங்கத்தைப் பார்த்து மக்கள் கெஞ்சும் நிலைக்குப் போய் விட்டது.




இந்த விலை ஏற்றம் நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடை கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் இன்றைய விலை நிலவரம், 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5670 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45360 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6185 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் அதிகமாகும். 


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.75.30 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 602.40 காசாக உள்ளது. 


நான்கு நாட்களில் ரூ. 840 அதிகரிப்பு


கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு சவரன் ஆபர தங்கத்தின் விலையில் ரூ. 840 அதிகரித்துள்ளது. நாட்டின் நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக விலை உயர்வு காணப்படுகிறது. மேலும், தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வதாலும் தங்கம் விலை உயர காரணமாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். நகை வாங்கும் மக்களிடையே இந்த விலை ஏற்றம் சுணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்