சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் உயர்வை நோக்கி செல்கிறது. இது வாடிக்கையாளர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
தீபாவளி வருவதற்கு முன்னர் மக்களை படாதபாடு படுத்தி விடும் என்றால் அது மிகையில்லை எனலாம். சாமானிய மக்களிலிருந்து அனைத்து தரப்பு மக்களையும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும். இது வாங்கனும் அது வாங்கனும் என்று பர்சை காலியாக்கி விட்டு தான் போகும் தீபாவளி பண்டிகை.
இப்படி இருக்கும் இந்த நேரத்தில் தங்கமும் அதன் வேலையை காட்டாமல் இருக்குமா? அதுவும் அதன் பங்கிற்கு விலையை ஏற்றிவிட்டு தான் போகும். அப்படி தான் தற்பொழுது தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் கவலையில் இருந்தாலும், இவ்வளவு பணம் குடுத்து நகை வாங்கி விட்டேன் என்று பெருமை கூறுபவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றனர்.
\ம்ம்ம், சரி இன்றைய தங்கம் விலை என்ன தெரியுமா?.
1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5715 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.60 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45720 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6235 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 17 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49880 ஆக உள்ளது.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.80 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 598.40 காசாக உள்ளது. தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போறது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன் காரணத்தினால் உயர்ந்து வருகிறது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}