திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை - செல்வப்பெருந்தகை உறுதி!

Mar 01, 2026,08:47 AM IST

சென்னை:   திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    

திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக சொல்லியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.


  


ராகுல் காந்தி தமிழகத்தின் மீது பற்று வைத்துள்ளார். மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய நாங்கள் விடமாட்டோம். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது.


எங்கள் கூட்டணி கொள்கை  கூட்டணி, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி.  இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்