கடந்த 5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை.. அசத்தும் நியூயார்க் நிறுவனம்

Jan 10, 2023,03:36 PM IST
நியூயார்க்: அய் டிஜிட்டல் என்ற நியூயார்க் நிறுவனத்தில் கடந்த  5 வருடத்தில் எந்த ஊழியரும் ராஜினாமா செய்யவில்லை என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் மக்லி கூறியுள்ளார்.



இது ஒரு விளம்பர நிறுவனமாகும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் மன நிறைவுடன், மன மகிழ்ச்சியுடன் பணியாற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதால்தான் தனது நிறுவனத்திலிருந்து யாரும் விலக விரும்புவதில்லை என்று மக்லி கூறியுள்ளார்.

பெரிய பெரிய நிறுவனங்களில்  ஊழியர்கள் கொத்துக் கொத்தாக களையெடுக்கப்பட்டு வருகின்றனர். அறிவிப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பெரிய நிறுவனங்கள் நீக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வேலையிலிருந்து யாரையும் எடுக்காமல், ஊழியர்களும் சந்தோஷமாக வேலை பார்க்கும் நிறுவனம் இருக்கிறது என்பது ஆச்சரியமானதுதான்.

இதுகுறித்து ஸ்டீபன் மக்லி மேலும் கூறுகையில், நல்ல திறமை கிடைத்தால் அதை விடக் கூடாது.  அதற்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அந்தத் திறமையாளரை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்வேன். எனது நிறுவனத்தின் வெற்றிக்கு எனது திறமையான பணியாளர்களே காரணம். அவர்களுக்கான ஆரோக்கியமான பணிச் சூழ்நிலையை நான் ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன்.

கொரோனா காலம் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி விட்டது. சரியான மன நலனை பேணுவது பெரும் சவாலுக்குரியதாக மாறியிருந்தது. அந்த சமயத்தில் எங்களது ஊழியர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தோம். ஒவ்வொருவருடைய பிரச்சினையையும் இணைந்து தீர்த்து வைத்தோம்.

வேலையிலும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்போம். விட்டுக் கொடுப்போம். ஊழியர்களாக இல்லாமல் ஒரு குடும்பமாக பழகியதால் இது சாத்தியமாயிற்று.  பணியாளர்களுக்கு மனச்சுமை இருக்கக் கூடாது. வேலைப்பளு அவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது. சுதந்திரமாக அவர்களைப் பணியாற்ற விட வேண்டும். அப்போதுதான் அவர்களது வேலை சிறப்பாக இருக்கும் .

ஆரோக்கியமான சூழல் ஒரு நிறுவனத்தில் இருந்தால் அந்த நிறுவனத்துக்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பாக, வலுவாக இருக்கும், அது நீண்டு கொண்டே போகும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்