சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் whatsapp குழு உருவாக்கவும், தாழ்வான இடங்களில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர், பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இந்தக் கூட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த அதிக மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது இது குறித்து அவர் பேசியதாவது,
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும்.மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய whatsapp குழு ஒன்றை அமைக்க வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பருவ மழை காலங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலக்கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழைக் காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}