சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வராமல் இருப்பதால் வட கிழக்குப் பருவ மழை தொடங்குவது தாமதமாகிறதாம்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. இந்த காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்குப் பரவலாக அதிக அளவில் மழைப்பொழிவு கிடைக்கு். ஆனால் அக்டோபர் மாதம் தொடங்கி 12 நாட்கள் ஆன நிலையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்கமால் உள்ளது. இதற்கு தென்மேற்கு மழை இன்னும் நிற்காமல் பெய்வது தான் காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த மாதம் 15ம் தேதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கில் வீசத்தொங்கும் காற்று நின்ற பின்னர் வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கிய பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. அது இருக்கட்டும்.. ஸ்கூலுக்கு லீவு விட்ற அளவுக்கு மழை பெய்யுமா இல்லையா.. அதைச் சொல்லுங்க என்று ஸ்கூல் குட்டீஸ் எல்லாம் ரொம்ப ஆர்வமாக காத்திருக்காங்க.. பார்க்கலாம்.. இந்தவாட்டி எத்தனை நாளுக்கு ஸ்கூல் லீவு கிடைக்குதுன்னு!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}