பியாங்யாங்: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், தனது நாட்டு ராணுவத்தை போர் ஆயத்த நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் அதிகரித்துள்ளது.
போர் ஆயத்த நிலையில் இருக்குமாறு கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்த நிலையில் வட கொரிய ராணுவம் தொடர்ந்து பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேற்குக் கடற்கரையில் உள்ள நாம்போ கடற்படைத் தளத்திலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதை கிம் ஜாங் உன்னும் நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 முறை கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது வட கொரியா. வட கொரியாவின் இந்த சேட்டையை தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் தொடர்ந்து உரசல் இருந்து கொண்டே இருக்கிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக ஜப்பானும், அமெரிக்காவும் இருப்பதால் அந்த நாடுகள் மீதும் வட கொரியா ஆத்திரத்தைக் காட்டி வருகிறது. வட கொரியாவை அணு ஆயுத நாடாக மாற்றி வருகிறார் கிம் ஜாங் உன். ராணுவத்திடம் அணு ஆயுத பலம் இருக்கும் நிலையில் தற்போது கடற்படையிலும் அணு ஆயுதத்தை சேர்க்கும் வேலையை வட கொரியா தொடங்கியுள்ளது.
இதனால் இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மேலும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில்தான் போர் ஆயத்த நிலையில் தனது ராணுவம் இருக்க வேண்டும் என்று கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் தென் கொரியா மீது அவர் தாக்குதலுக்கு திட்டமிடுகிறாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
கிம் அண்ணே.. சண்டையே மூண்டாலும்.. "கொரிய சீரியல்"களுக்கு எந்தப் பாதிப்பும் வராம பாத்துக்கங்க.. எங்கூர்ல நிறையப் பேரு இதுலதான் "லிவிங்ஸ்டன்"!
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}