வருகிறது வடகிழக்கு பருவமழை.. ஒரு உயிரிழப்பு கூட நேரிடக் கூடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Sep 30, 2024,06:08 PM IST

சென்னை:   வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.


வட கிழக்குப் பருவ மழை வரப் போகிறது. அக்டோபர் வந்தாலே மழை குறித்த கவலைகளும் மக்களிடம் வந்து விடும். மக்களுக்கு மட்டுமல்லாமல், அரசுக்கும் கூட அந்தக் கவலை வந்து விடும். காரணம், பெருமழையால் ஏற்படும் பெருவெள்ளங்கள் மற்றும் புயல் பாதிப்புகளை சமாளிக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில் வரப் போகிற வட கிழக்குப் பருவமழைக்காலத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டார்.




கூட்டத்தில் அதிகாரிகளிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த  3 ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுது்து வருகிறோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என தமிழ்நாட்டிற்கு 2 பருவ காலங்களில் மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் கிடைக்கும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு அதிகபடியான மழை கிடைக்கிறது. வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து கொண்டு இருந்தது. 


முன்னெச்சரிக்கையாக இருங்கள்: 


முன்னெச்சரிக்கையாக இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்துவிடலாம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் குறைந்த நேரத்தில் அதீத மலையை எதிர்கொள்வது முக்கியம். கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. காலநிலை மாற்றப் பாதிப்பை எதிர்கொள்வது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நம்மால் பாதிப்புகளை தடுக்க முடியும். வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ள தமிழக அரசு டிஎன் அலர்ட் செயலியை உருவாக்கியுள்ளது. எதிர்பார்க்கப்படும் மலையளவு ஏரிகளின் நீர் இருப்பு நிலவரத்தை அந்த செயலியின் மூலம் மக்கள் அறிய முடியும். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வெள்ளத் தடுப்பு, மின் கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அதனை அனைத்து துறை அலுவலர்களும் சேர்ந்து செய்தால் பேரிடர்களை தடுக்க முடியும். பருவ மழை ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள அனைவரும் ஒரே அணியாக நிற்க வேண்டும். வெள்ளத் தடுப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்த வேண்டும். 


அனைவரும் இணைந்து செயல்படுங்கள்:




அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும் பால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், வெள்ளத்திற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு  மக்களை அழைத்து செல்ல வேண்டும். பாதிப்பு எற்பட்டவுடன் எவ்வளவு விரைவாக செயல்பட முடியுமா அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும்.


மர அறுப்பான் கருவிகள்,படகுகள் உள்ளிட்டவற்றை தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வைத்திருக்க வேண்டும். பல்வேறு வெள்ள தடுப்பு பணிகளை மழைக்கு முன்பாகவே தொடங்கி வேண்டும்.வெள்ள தடுப்பு பணிகள் மட்டும் இன்றி, ஆண்டு தோரும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், நீர்நிலைகளை சரி செய்தல் முன்னிட்டவற்றை செய்ய வேண்டும். 


வெள்ளம் , புயல் போன்ற நேரங்களில் தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய வசதிகளை தடையின்றி செயல்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் தன்னார்வலர்களின் பங்கு என்பது மிகவும் அவசியம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்