பெங்களூரு: கேஜிஎப் படத்தில் ஷெட்டி என்ற வேடத்தில் நடித்தவரான, பிரபல கன்ன நடிகர் தினேஷ் மங்களூரு உடல் நல பாதிப்பால் மரணமடைந்தார்.
மறைந்த நடிகர் தினேஷுக்கு வயது 55. கேஜிஎப், கிச்சா மற்றும் கிரிக் பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் அவர் மிகவும் பிரபலமானவர். உடுப்பியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3:30 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
பிளாக்பஸ்டர் திரைப்படமான KGF-ல் பாம்பே டான் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தினேஷ் புகழ் பெற்றார். அவரது திடீர் மரணம் கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா படத்தில் நடித்து வந்த அவருக்கு, படப்பிடிப்பின் போது க்கவாதம் ஏற்பட்டது. பெங்களூரில் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளை இரத்த கசிவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வருடமாக உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினேஷுக்கு மனைவி பாரதி மற்றும் பவன், சஜ்ஜன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மறைந்த தினேஷின் உடல் லக்கேரியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினேஷ் ஒரு சிறந்த கலை இயக்குனராகவும் இருந்தார். அவர் சின்னாரி முத்தா போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றினார். டி.எஸ். நாகாபரணாவின் ஜனுமதா ஜோடி திரைப்படத்தில் கலை இயக்குனராக அறிமுகமானார். வீரா மடகாரி, சந்திரமுகி பிராணசகி மற்றும் எண். 73 சாந்திநிவாஸ் போன்ற பல படங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.
2004-05 ஆம் ஆண்டில், சிவராஜ்குமார் நடித்த ரக்ஷசா திரைப்படத்தில் சிறந்த கலை இயக்கத்திற்காக கர்நாடக மாநில விருது அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர், துணை வேடங்களில் நடித்ததன் மூலம் அவர் மேலும் அங்கீகாரம் பெற்றார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}