AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!

Jun 20, 2025,12:45 PM IST

சென்னை: AI வந்தாலும் வந்துச்சு.. அது எதுக்கு வந்துச்சுங்கிற பர்பஸை மட்டும் நம்மாளுங்க தூக்கி டிஸ்போஸ் பண்ணிட்டு குண்டக்க மண்டக்க வச்சு செஞ்சிட்டிருக்காங்க.. இப்போது புது டிரெண்டும் கிளம்பி பட்டையைக் கிளப்பிட்டிருக்கு.


AI வருவதற்கு முன்பு வரை அதுகுறித்த தெளிவும், விவரமும் நம்மிடம் இல்லை. வரட்டும் பார்க்கலாம் என்ற சாதாரண மன நிலையில்தான் மக்கள் இருந்தார்கள். ஆனால் இந்த AI வந்த பிறகு நடந்து வருவதைப் பார்க்கும்போது அச்சச்சோ இது எங்க போயி நிற்கப் போகுதோ என்ற மலைப்புதான் வருகிறது. கூடவே அச்சமும் கிளம்பி வளைத்து வருகிறது.



இதற்கிடையே, நம்மவர்கள் இப்போது இந்த AIயை வைத்து செம காமெடி செய்து வருகின்றனர். காமெடி என்றாலே நமக்கு 2 பேர்தான் டக்குன்னு நினைவுக்கு வருவார்கள்.. ஒருத்தர் கவுண்டமணி, இன்னொருவர் வடிவேலு. இதில் வடிவேலுவை வைத்து போடாத மீம்ஸே இல்லை என்று சொல்லும் அளவுக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு போட்டுக் குமித்து வைத்துள்ளோம். இப்போது அப்டியே அப்டேட் ஆகி AI பக்கம் வடிவேலுவைத் தள்ளிக் கொண்டு போயுள்ளனர் நம்மாட்கள்.


திரும்பிய பக்கமெல்லாம் வடிவேலு காமெடிக் காட்சிகளை வைத்து உருவாக்கப்படும் AI காட்சிகள்தான் கலக்கிக் கொண்டுள்ளன. ஒரு பெரிய சைஸ் குண்டுப் பையன்தான் இந்த வடிவேலு காட்சிகளின் நாயகனாக வலம் வருகிறான். பார்க்கவே செம சிரிப்பாக இருக்கிறது. வடிவேலுவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல காமெடி சீன்களை எடுத்து ஏஐ வடிவுக்கு மாற்றி வலம் விட்டுக் கொண்டுள்ளனர்.



அதிலும் கையைப் புடுச்சி இழுத்தியா, ஹாய் ப்ரூஸ் டுடே மணி கம்ஸ் டுமாரோ கோஸ்யா.. போன்ற காமெடிக் கட்சிகள் வைரலாகிக் கொண்டுள்ளன. அந்தப் பையனுக்கு சில நேரங்களில் வடிவேலுவின் முகம் பொருத்தமாக இருக்கிறது. சில இடங்களில் பொருந்தவில்லை.. ஆனாலும் சிரிக்க வைத்து விடுகிறது இந்த ஏஐ மீம்ஸ்.


பிரண்ட்ஸ் படத்தில் வரும் கோபாலு கோபாலு.. ஏ அய்யா கோபாலு.. காமெடியை வச்சு செஞ்சிருக்காங்க பாருங்க ஒரு ஏஐ வீடியோ.. ஒரிஜினலைப் போலவே விலா நோக சிரிக்க வைக்கிறது பாஸ்!


சினிமாவில் கலக்கிய வடிவேலு பின்னர் டிவியில் தொடர்ந்து காமெடி சீன்களைப் போட்டு போட்டு அதிலும் கலக்கினார். அதைத் தொடர்ந்து மீம்ஸ்களில் மன்னனாக வலம் வந்தார்.. இப்போது ஏஐயிலும் அவர் கலக்க ஆரம்பித்திருக்கிறார்..!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உத்தராகண்ட் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளத்தால் மலைச்சரிவு... 17 பேர் உயிரிழப்பு!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக., 14ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

news

7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

எங்கள் வேலை வாய்ப்புகளை இந்தியர்கள் பறிக்கிறார்கள்.. அமெரிக்க குடியரசுக் கட்சி பிரமுகர் புலம்பல்

news

சேலத்து மகாராணி.. கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா.. களை கட்டிக் காணப்படும் சேலம்!

news

தமிழ்நாடு தந்த அன்பை.. சிறப்பாக திருப்பிக் கொடுத்துள்ளீர்கள்.. சூர்யாவுக்கு கமல்ஹாசன் பாராட்டு

news

மிக்சர் சாப்பிடலையாம்.. விஜய்யின் அமைதிக்கு இது தான் காரணமா?.. இது லிஸ்ட்லையே இல்லையே!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 05, 2025... இன்று உதவிகள் தேடி வரப்போகும் ராசிகள்

news

தவெக 2வது மாநில மாநாடு.. இன்று புதிய தேதியை அறிவிக்கிறார் விஜய்.. அனுமதி கிடைக்குமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்