- பொன் லட்சுமி
சென்னை: பொது மக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது... அது என்னவென்றால் இனிமேல் பயனாளர்கள் ஈபி பில் கட்டுவதற்காக, வெயிலிலோ மழையிலோ அலைந்து திரிந்து கஷ்டப்பட வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே வாட்ஸ்ஆப் மூலமாக மின் கட்டணத்தை ஈஸியாக செலுத்தலாம் என்ற செய்திதான் அது.
எங்கு பார்த்தாலும் UPI பேமென்ட்தான் இப்போது பிரபலமாக உள்ளது. காய்கறிக் கடைக்குப் போனாலும் சரி, பானி பூரி வாங்கி சாப்பிட்டாலும் சரி.. எதுவாக இருந்தாலும் யுபிஐ மூலமாக இஸியாக பே பண்ண முடிகிறது. அந்த வசதியை தற்போது மின் கட்டணத்திற்கும் கொண்டு விட்டார்கள். இதுதொடர்பாக டான்ஜெட்கோ சூப்பரான செய்தியை வெளியிட்டுள்ளது.

நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணம் செலுத்த மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று தான் கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பின் தொழில்நுட்பம் வளர வளர இணையதளத்தின் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.. அதனைத் தொடர்ந்து கூகுள் பே, போன் பே போன்றவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதியையும் அறிமுகம் செய்தது. இதனால் பொதுமக்கள் உரிய தேதியில் தவறாமல் பணத்தை செலுத்தும் சிறந்த வசதியாக இது அமைந்தது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப் மூலமாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது 500 யூனிட்டுகளுக்கும் மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் வாட்ஸ்ஆப் யுபிஐ (UPI) மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் இரண்டு கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் தங்களின் மொபைல் போன் எண்ணை மின் வாரியத்திடம் பதிவு செய்துஉள்ளனர். அதன் மூலமாக மின் கட்டணம், மின்சார துண்டிப்பு தகவல்கள், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அந்த நுகர்வோர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இனிமேல் 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்கள் தங்களது வாட்ஸ்ஆப் வாயிலாகவே கட்டணம் செலுத்தலாம்..
94987 94987 இதுதான் பில் கட்டுவதற்கான வாட்ஸ் ஆப் எண். உங்களத் மொபைல் போனில் இந்த எண்ணை நீங்கள் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் டான்ஜெட்கோவின் வாட்ஸ் ஆப் எண். உங்களது வாட்ஸ்ஆப்பில் இதைப் பார்க்கும்போது, அதில், 'வியூ, பே பில்' என்று இரண்டு 'லிங்க்' ஆப்ஷன் இருக்கும். அதில் வியூ பக்கத்தில் மின் பயன்பாடு, கட்டண விபரம் ஆகியவை அடங்கி இருக்கும். பே பில் பக்கத்தில் கட்டணம் செலுத்தும் வசதி இருக்கும். அதை தேர்வு செய்து தங்களின் வாட்ஸ்ஆப் யு.பி.ஐ., வாயிலாக கட்டணத்தை செலுத்தலாம்.
இந்த முறை மின் கட்டணத்தை செலுத்தி விட்டால் பரவாயில்லை. அடுத்த முறை மின் கட்டணத்தை செலுத்தும்போது இதை டிரை பண்ணிப் பாருங்க.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}