தேனி: விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறையாது. உண்மையில் சொல்வதானால், விஜய் ரசிகர்கள் பாதிப்பேர் எனக்கு தான் வாக்களிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு நடப்பதற்கு முன்னர் விஜய் ஆதரவாக பேசி வந்த சீமான், விஜய் மாநாட்டின் கொள்கைகளை அறிவித்த பின்னர், விஜய் கட்சி கொள்கை வேறு தங்களின் கொள்கை வேறு என்று தானும் விஜய்யும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று கூறி வருகிறார்.
இந்நிலையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைந்நாளரான சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்டோர் அரசியல் கட்சி தொடங்கும் போது அவர்களது ரசிகர்களை சந்தித்து தான் அரசியலுக்கு வந்தனர். ஆனால், திரைத்துறையில் இருந்த வந்த நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. மக்களை தான் சந்தித்து அரசியலுக்கு வந்தேன்.

பொதுவாக நடிகரை சந்திக்க கூட்டம் அதிகளவில் வரும். கூட்டம் வந்ததால் அனைவரும் ஓட்டு போடுவார்கள் என்பது சந்தேகமே. விஜய்யின் அரசியல் வருகையால் எனது வாக்குகள் குறையாது. விஜய்யின் ரசிகர்கள் எனக்கு தான் வாக்களிப்பார்கள். கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்பது விஜய்யின் பெருந்தன்மை. அதனை ஏற்று அவரது கூட்டணியில் இணைவது என்பது அவரவர் விருப்பம், எங்களைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது.
இதுவரை, திமுக, அதிமுக தனித்து போட்டியிட்டது இல்லை. ஒரே ஒரு முறை 2014 ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டார். இந்தியாவில் தொடர்ச்சியாக தனித்துப் போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுடைய தனித்துவம் தனித்துவமானது என்பதால் மற்றவர்களுடன் சமரசம் செய்ய முடியாது. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து தான் போட்டியிடுவேன். கொள்கையிலும் சமரசம் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டு திமுக வெற்றி பெற்று இருக்கிறது. ஏதும் பயன் இருக்கிறதா. தோற்றுப் போன எல் முருகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}