சென்னை: டாஸ்மாக் ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஊழலில் தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை மதுபானக்கடை மது விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று அமலாக்கத்துறை கூறுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு லட்சம் கோடிகளுக்கும் மேல் ஹிமாலய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில, பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசைக் காப்பாற்றும் நோக்கில் 1000 கோடிகள் என குறைத்துக்கூறி விசாரணையைச் சுருக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசு மதுபானக்கடை சில்லறை விற்பனையில் போத்தலுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்தது தொடங்கி, மதுபான கொள்முதல், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, டாஸ்மாக் வாகன போக்குவரத்து உரிமம், மதுபானக்கூட உரிமம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் என பல்வேறு நிலைகளில் ஒவ்வொரு மாதமும் பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதைத்தவிர டாஸ்மாக் மதுபான விற்பனையில் 50 சதவீதத்திற்கு மேல் கணக்கில் காட்டப்படாமல் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக திமுக அரசின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான ஐயா பழனிவேல் தியாகராஜன் ஆங்கில் நாளிதழ் நேர்காணலில் அளித்துள்ள வாக்குமூலமும் திமுக அரசின் மதுபான ஊழலுக்கு மறுக்க முடியாத சான்று பகிர்கிறது.

அதனால் தான் திமுக செய்துள்ள ஊழல்களை அமலாக்கத்துறை மூலம் குறைத்துக்காட்டி மூடி மறைக்க முயல்கிறதா பாஜக அரசு?
திமுக அரசிடம் மட்டும் அமலாக்கத்துறைக்கு ஏன் இத்தனை மென்மைபோக்கு? முழுமையாக விசாரணை நடத்தாமல் 1000 கோடிகள் மட்டுமே ஊழல் என்று அவசரமாக அறிவித்தது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தொடர்பு என்று அமலாக்கத்துறை அறிக்கை அளித்தது எப்படி? மக்களின் வரிப்பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை உண்மையிலேயே அமலாக்கத்துறைக்கு இருக்குமாயின், மற்ற மாநில மதுபான ஊழலில் காட்டிய வேகத்தையும், தீவிரத்தையும் திமுக அரசின் மதுபான ஊழல் விசாணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் விசாரணையில் காட்ட தயங்குவது ஏன்? இதன் மூலம் பாஜக-திமுக இடையேயான மறைமுக உறவு மீண்டுமொருமுறை வெளிப்படுகிறது.
ஆகவே, தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இமாலய மதுபான ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், உயர் அதிகார மையத்தில் உள்ளவர்கள் வரை அனைவரையும் கைது செய்து விசாரணை வளையத்தை விரிவு செய்து, பாகுபாடற்ற நேர்மையான விசாரணை நடத்தி, பல்லாயிரம் கோடிகள் அளவிற்கு நடைபெற்றுள்ள ஊழலை முழுமையாக வெளிப்படுத்தி, மக்கள் வரிப்பணத்தை முழுவுதுமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}