மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

Oct 09, 2026,05:38 PM IST

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தனித் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.


மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சிக்கு வெறும் 1772 ஓட்டுக்களே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் ஜி. ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தாராபுரம் தொகுதியில் வேட்பாளர் கார்த்திகா 5268 வாக்குகளையே வென்றுள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட்ட திவ்யா 6,026 வாக்குகள் பெற்றது நினைவிருக்கலாம்.


இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் ஒரு தெளிவான சரிவு ஏற்பட்டுள்ளது தெரியவருகிறது. 




கடந்த தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் ஜி. ஜானகிராமன் 4,950 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சி 1,772 வாக்குகளை மட்டுமே பெற்று 3,178 வாக்குகளை இழந்துள்ளது. அதேபோல தாராபுரம் தொகுதியில் கடந்த முறை திவ்யா 6,026 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், தற்போது 5,268 வாக்குகள் மட்டுமே பெற்று 758 வாக்குகள் சரிவைச் சந்தித்துள்ளது. 


தாராபுரத்துடன் ஒப்பிடும்போது மதுராந்தகத்தில் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கைநழுவிப் போனது அக்கட்சிக்குக் கிடைத்த பெரும் பின்னடைவாகும். 


தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய மாற்றங்கள், தீவிரமான இருமுனைப் போட்டிகள் மற்றும் மாற்று அரசியல் வாக்குகளில் ஏற்பட்டுள்ள சிதறல்கள் போன்றவை நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் குறைய முக்கிய காரணங்களாக அமைந்திருக்கலாம். 


தாராபுரத்தில் ஓரளவிற்குத் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்திருந்தாலும், மதுராந்தகத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி அக்கட்சி தனது களப்பணியிலும் அமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.


முதல்வர் விஜய்யை மட்டுமே குறி வைத்து இப்போது அரசியல் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். விஜய்யை மிகக் கடுமையாக சாடியும் வருகிறார். திமுகவை அவர் முன்பு போல எதிர்த்து அரசியல் செய்வதில்லை. தனி நபர் விமர்சனங்களிலும் அதிக அளவில் சீமான் ஈடுபடுகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இதுவும் கூட நாம் தமிழர் கட்சியின் சரிவு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.


கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு 8 சதவீத வாக்குகளுடன் அதிரடி வளர்ச்சியை எட்டியிருந்த நாம் தமிழர் கட்சி, தற்போது கிட்டத்தட்ட ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்