நுங்கு சாப்பிடலையோ நுங்கு.. வந்தாச்சு சீசன்.. வாங்கி சாப்பிட்டு ஜில்லுன்னு இருங்க!

May 06, 2025,04:56 PM IST

நுங்கு  in English "Tender kernel of a Palmyra fruit" or "Tender Palmyra fruit" என்று மொழி பெயர்க்கலாம் சிலர் ஐஸ் ஆப்பிள் (ice Apple) என்று சொல்வதுண்டு. நுங்கு பழம் தக் டோலா என்றும் பனைப் பழம் பால் மயிரா டெண்டர் நட் என்றும் அழைக்கப்படுகிறது. 


கத்திரி வெயில் அக்னி நட்சத்திரம் மே நான்காம் தேதி துவங்கி அடிச்சு கொளுத்துகிறது இல்லையா ?...எதை சாப்பிட்டால் எனர்ஜி கிடைக்கும் என்று குளிர்பானங்கள் பக்கம் தான் நம் மனம் செல்லும். ஆனால் இயற்கையாக கிடைக்கும் நுங்கு உண்பதனால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அதை அப்படியே பார்க்காமல், ஒரு சிறு கதையின் மூலம் பார்ப்போம்...


கிரண்( ஏழாம் வகுப்பு முடித்து எட்டாம் வகுப்பு) தன் அம்மாவுடன் அடுத்த வருடம் ஸ்கூல் ஆரம்பமாகப்போகிறது. அதனால், இரு சக்கர வாகனத்தில் அம்மாவும் மகனும் தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு ஷாப்பிங் சென்றனர். அம்மா எனக்கு ஷாப்பிங் செல்லும் பொழுது ஐஸ்கிரீம், ஜெல்லி ,ஃபலூடா எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன் அம்மாவுடன் ஜாலியாக சென்றான் கிரண். அம்மாவும் ஓ.கே ...என்று கூறினாள். பிறகு ரோட்டோரம் வரிசையாக இளநீர் ,நுங்கு ,தர்பூசணி கடைகள் இருந்தன. ஆனால் கிரண் மனதில் ஐஸ்கிரீம் மட்டும்தான் இருந்தது.




எனவே வண்டியை கடை பக்கம் ஓரமாக நிறுத்தி அவற்றை காண்பித்து   இப்போ எப்படி வெயில் அடிக்கிறது பார்த்தாயா? நான் வாங்கித் தரும்  இந்த நுங்கு சாப்பிடு  பின்பு ஐஸ்கிரீம் வாங்கி தரேன் என்று முதலில் நுங்கு கடைக்காரரிடம் நுங்கு சீவி கொடுக்கச் சொல்லி கிரணுக்கு ஊட்டினாள். அம்மா இது லிச்சி பழம் போன்றே உள்ளது. என்றான் கிரண். பிறகு அவனுக்கு அதன் பயன்களை கூறத் தொடங்கினாள்.


* நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. வெயில் அதிகமாக இருப்பதனால் உனக்கு வேர்க்குரு வருகிறது இல்லையா ?...அதற்கு நுங்கு தண்ணீர் தடவினால் சரியாகும். அரிப்பு நீங்கும் .மேலும் கொப்புளங்கள் ,தோல் நோய்களை குணமாக்க உதவுகிறது 


* வயிறு அ சௌகரியம்  காலையில் உனக்கு வயிற்று சுகவீனம் வருகிறது இல்லையா?.. செரிமான பிரச்சினைகள் தொடர்பான அனைத்தையும் இந்த நுங்கு சாப்பிட்டால் சரியாகிடும் கண்ணா.


நம்ம தாத்தா போன்ற டயாபடீஸ் நோயாளிகளுக்கு இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது .நம் தாத்தாவிற்கும் வாங்கிக் கொண்டு செல்வோம். பொட்டாசியம் நிறைந்தது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.


அம்மா எனக்கு இன்னொன்றும்  வேண்டும் என்று  கிரண் கூறினான் கூடே, பிறகு என்ன பயன்கள் இருக்கிறது அம்மா என்று கேட்டான்.


ரத்த சோகை நோயாளிகளுக்கு நல்ல உணவு .கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது .நுங்கில் உள்ள நீர்  வயிற்றை நிரப்பி  பசியை தூண்டுகிறது.


கிரண் உனக்கு அடிக்கடி டைட் மோஷன்  (மலச்சிக்கல் ) வருகிறது இல்லையா? இது சாப்பிட்டால் அதுவும் சரியாகிடும் கண்ணா.பிறகு இதில் வைட்டமின் ஏ ,  சி  மற்றும்  பி 7 போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம் பைட்டோ  நியூட்ரியன்ஸ் அதிகம் உள்ளது. இதெல்லாம் அடுத்த வருடம் நீ அறிவியல் பாடத்தில் படிப்பாய் என்று கூறினாள் நான் இதில் உனக்கு நொங்கு பாயாசம் செய்து தருகிறேன் கண்ணா என்று ஒரு பெரிய பார்சல் வாங்கிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.


அடடே இதை கூற மறந்து விட்டேனே என்று வண்டியில் செல்ல செல்ல நுங்கு பழம் கூந்தலை வறண்டு போகாமல் காக்கிறது .இது இயற்கையான கண்டிசனராக செயல்பட்டு முடியை பலப்படுத்துகிறது.  முடி பிளவு சிறு  வயதிலேயே நரைமுடி வருவதை தடுத்தல், முன்கூட்டியே  வழுக்கை போன்ற வெப்பம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது, என்று கூறிக்கொண்டே வந்தார். ஆனால் ..கிரண் அம்மா எனக்கு ஒரு சாக்கோபார் ஐஸ்கிரீம் என்று  கொஞ்சி கேட்டான்  கேட்டான் ..தன் அம்மாவை கட்டி அணைத்துக் கொண்டு. அவளும் சிரித்துக் கொண்டே ஓகே... இப்பொழுது நுங்கு நிறைய சாப்பிட்டு விட்டாய்  இல்லையா ?... அதுவே எனக்கு சந்தோஷம் என்று வண்டி ஓட்ட தொடங்கினாள்.


கோடை வெயிலுக்கு தினமும் நுங்கு சாப்பிடுவோம் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% வேண்டும்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!

news

ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!

news

காஷ்மீரில் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து எம்.பி. ராகுல்காந்தி ஆறுதல்!

news

நிதி ஆயோக் கூட்டம்: இந்த மாநில முதல்வர்கள் எல்லாம் புறக்கணிச்சிருக்காங்க.. யார் யார் தெரியுமா?

news

மத்திய அரசுடன் இணக்கமான உறவை ஏற்படுத்துங்க.. முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!

news

கேரளாவில் துவங்கியது.. தென்மேற்கு பருவ மழை.. ஜூன் முதல் வாரத்தில் நாடு முழுவதும் பரவும்..!

news

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

news

இன்று மாலை தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – படக்குழு அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்