பிளஸ்டூ முடிச்சுட்டீங்களா..  அரவிந்த் கண் மருத்துவமனையில்..  சூப்பர் ஆஃபர் காத்திருக்கு!

May 15, 2024,06:37 PM IST
மதுரை: நீங்க பிளஸ் டூ முடித்த மாணவியரா.. செவிலியர் ஆகணுமா.. அப்ப மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சூப்பரான ஆஃபர் காத்திருக்குங்க.

எல்லோருக்கும் தங்களின் எதிர்காலத்தை நினைத்து ஒரு கவலை இருக்கும். எனக்கு டாக்டர் ஆகனும்னு ஆசை. எனக்கு மருத்துவத் துறை ரொம்ப பிடிக்கும். ஆனால் எனக்கு படிக்க வசதி இல்லை. ஒரு டாக்டராக முடியவில்லை என்றால் ஒரு நர்சாவது ஆகணும். அதற்கு என்ன செய்வது அப்படின்னு யோசிக்கிற மாணவர்கள் இங்கு நிறைய பேர் இருக்காங்க .அப்படி இருக்கின்ற உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்திருக்காங்க நம்ம அரவிந்த் கண் மருத்துவமனையில்

அரவிந்த் மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்புகள் நடக்கும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம் என்பதுதான் இதன் சிறப்பம்சமே. இதில் மாணவியர் மட்டுமே சேரலாம். வயது வரம்பு 19 ஆகும்.

சேருவதற்கு தகுதி:  



நீங்க பிளஸ் டூ முடித்து இருந்தீங்கன்னா அப்போ உடனே இந்த பயிற்சியில் சேரலாம். பணிக்காக இந்த பயிற்சியில் சேர்ந்த ஒவ்வொரு மாணவிக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆனால் இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. இந்த இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சி முடித்த பின் கண்டிப்பாக அரவிந்த் ஹாஸ்பிடலில் மூன்று ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும். அப்படி வேலை செய்யும் இந்த மூன்றாண்டு காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.

இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? அப்ப உடனே விண்ணப்பியுங்கள்


தபால் மூலம் விண்ணப்பிக்க

அரவிந்த் கண் மருத்துவமனையில்  இரண்டு ஆண்டு செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 30 அன்று நேர்முகத் தேர்வு நடைபெறும். 

நேர்முகத்தேர்வின்போது நீங்கள் கொண்டு வர வேண்டியது:

plus two marksheet (original +xerox copy)
Aadhar Card (original+xerox copy)
Transfer certificate ( TC)-(original+ xerox copy)

பிறகென்ன மாணவியரே உடனே விண்ணப்பிங்க.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்