விசுவாசு வருடம் 20 25 அக்டோபர் முதல் நாளே மிகவும் விசேஷமான சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜையின் துவக்கமாக மிகச் சிறப்பான மாதமாக அமைந்துள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி அமைந்துள்ளது இம்மாதத்தின் துவக்கமே மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் மாதம் பெயர் காரணம்:
அக்டோபர் மாதம் என்பது க்ரிகோரியன் நாட்காட்டிகளில் 31 நாட்கள் கொண்ட பத்தாவது மாதம் ஆகும். அக்டோபர் என்ற பெயர்
லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் 8 என்று அர்த்தத்தைக் கொண்ட "அக்டோ " (octo) என்ற சொல்லிலிருந்து வந்தது. ஏனெனில் பண்டைய உரோம நாட்காட்டிகள் இது எட்டாவது மாதமாக இருந்தது.
அக்டோபர் மாதம் வடக்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்துடனும் தெற்கு அரைக்கோளத்தில் இளவேனிற் காலத்துடனும் தொடர்புடையது. அக்டோபர் மாதம் பண்டிகைகள், விடுமுறைகள் மற்றும் கலாச்சார கொண்டாட்டங்கள் நிறைந்த மாதமாகும்.
அக்டோபர் 2 இரண்டாம் நாள் இன்று விஜயதசமி. குரு ( வியாழக்கிழமை) வாரம் விஜயதசமி நாளன்று பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும். இந்த நாளை தசரா என்று ராவணனை ராமர் வென்றதை குறிக்கும் ஒரு விசேஷமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மற்றும் மகிஷாசுரனை துர்கா தேவி வென்றதையும், நவராத்திரியின் முடிவையும் குறிக்கும் விதமாக "தசரா "என்பது தீமையை நன்மை வென்றதை குறிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாள் சில மாநிலங்களில் ஊர்வலங்கள் மூலம் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி,துர்க்கை சிலைகளை அருகில் உள்ள ஆறுகள் அல்லது பெருங்கடல்களுக்கு எடுத்துச் சென்று நீரில் விட்டு வழிபடுகிறார்கள். மேலும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு சில மாநிலங்களில் கொண்டாடப்படுகின்றன. கர்நாடகாவில் தசரா கொண்டாடும் பாரம்பரியம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக மைசூர் நகரின் முழு அரண்மனையையும் விஜயதசமி கொண்டாட்டத்திற்கு பத்து நாட்களும் மிகவும் ஒளிமயமான விளக்குகளால் ஒவ்வொரு ஆண்டும் அலங்கரிக்கப்படுவது வழக்கம். காணவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். டெல்லி, வாரணாசி இடங்களில் "ராம்லீலா "நிகழ்ச்சிகள் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு "வித்யா ரம்பம்" செய்வது சிறப்பு. இந்த நாள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது சிறப்பாக அமையும்.
மேலும் அக்டோபர் மாதம் முழுவதும் உள்ள சிறப்பான நாட்கள்:
அக்டோபர் 2 :விஜயதசமி, தசரா,காந்தி ஜெயந்தி, சர்வதேச வன்முறையற்ற தினம்.
அக்டோபர் 3 : உலக புன்னகை தினம்
அக்டோபர் 5: உலக ஆசிரியர் தினம்.
அக்டோபர் 7: மகரிஷி வால்மீகி ஜெயந்தி.
அக்டோபர் 10 : தேசிய அஞ்சல் தினம்.
அக்டோபர் 11 : சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.
அக்டோபர் 16: உலக உணவு தினம் .
அக்டோபர் 20: தீபாவளி பண்டிகை.
அக்டோபர் 22: மகா கந்த சஷ்டி விரதம் தொடக்கம்
அக்டோபர் 27: சூரசம்காரம்
அக்டோபர் 28: முருகப்பெருமான் தெய்வானை திருமணம் நடைபெறும் நாள்.
அக்டோபர் 31 :ஹாலோவீன் தினம்.
இத்தனை சிறப்புகள் வாய்ந்த அக்டோபர் மாதம் அனைவருக்கும் எல்லா வளங்களும் நலங்களும் கிடைக்க பெறுவோமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கரூர் சம்பவத்தால் பின்னடைவு.. வலுவாக தாக்கும் திமுக.. கூட்டணியைத் தேடும் நிலையில் விஜய்?
கரூர் சம்பவத்தில் விஜய்யின் இதயத்தில் காயமோ, வலியோ இல்லை.. விஜய் கேள்வி கேட்பது தவறு.. சீமான்!
பாஜக விஜய்யை காப்பாற்றி... கரூர் சம்பவத்தில் பிணத்தின் மீது அரசியல் செய்கின்றன: செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
ஆபத்தான அரசியல் இது.. கரூர் துயரத்தில் விஜய்க்கு கொஞ்சம் கூட கவலையில்லை: திருமாவளவன் பாய்ச்சல்
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்!
பாமக இளைஞர் அணி தலைவராக .. ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் நியமனம்
இறைவனே எழுதிய திருவாசகம்!
வித்யாரம்பம் நிகழ்வு... கல்விக் கண் திறப்பு விழா.. தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
{{comments.comment}}