கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை.
இந்தியாவில், அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை 13வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணியின் தொடக்கம் ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது.
இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.,5) அறிவிக்கப்பட்டது. இலங்கையின் கண்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள கே.எல் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}