- பா. பானுமதி
பெண்மையை சிறப்பு செய்ய
பெண்ணை சுமந்தாய்
மதுரை கிழவியை பெருமை செய்ய மண்ணை சுமந்தாய்
விஸ்வரூபம் தரிசனம் காட்ட
விண்ணை சுமந்தாய்
நானிலம் அருமை செய்ய நடராஜனாய்
நாட்டியம் சுமந்தாய்
இசையில் இளமை சொல்ல உடுக்கை
பண் சுமந்தாய்

பாடல்கள் நயம் பாராட்ட எண் சுமந்தாய்
அக்னியை பெருமை
படுத்த நெற்றி
கண் சுமந்தாய்
நடமாடி சதி சொல்ல தோளில்
பூண் சுமந்தாய்
இன்னும் எத்தனை சுமப்பாய் இறைவா...
என்னையும் சேர்த்து சுமக்கும் தலைவா
பணிந்தேன் நின் பாதம்
ஓம் நமசிவாய
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}