ஏனாதி நாயனார் வரலாறு.. 63 நாயன்மார்கள் வரலாறு!

Apr 09, 2026,11:04 AM IST

- கலைவாணி கோபால் 


சோழ நாட்டை  அநபாய சோழன் என்னும் அரசன் ஆண்டு கொண்டிருந்த காலம். இன்றைய... கும்பகோணம் தான் அது. கும்பகோணம் அருகே உள்ள ஊரில் வாழ்ந்து வந்தவர் ஏனாதி நாதர். அந்த ஊரிலே அவர் ஒரு கடிகையும் நடத்தி வந்தார்.


(கடிகை என்பது எல்லா வகை தற்காப்பு மற்றும் தாக்குதல் கலைகளைக் கற்றுத் தரும் பயிற்சி கூடம் ஆகும்) 


அதாவது, அரசர்களின் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இடமாகவும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏனாதி நாதர் அரசரின் படைப்பிரிவில் அதிகாரம் கொண்ட அதிகாரிகளின் தலைவர். அதாவது,... (ஏனாதிபதி) கட்டளையிடும் அதிகாரம் கொண்டவர்.  ஏனாதி என்பது இவரின் இயற்பெயர் அல்ல.


ஏனாதிநாதர் வீரத்தில் மட்டும் அல்லாது சிறந்த சிவபக்தியிலும் , முதன்மையானவர். "ஒளி பொருந்திய திருநீறு பூசியவர்"  எவராயிருந்தாலும், அவரை சிவனாகவே கருதி சிவத்தொண்டு செய்து வாழ்ந்தவர்.


அது போல, கடிகையில் வரும் வருமானத்தில் முழுமையாக சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார்.


ஏனாதிநாதர் வீர விளையாட்டு வீரர் என்றாலும், வெல்ல முடியாதவர் என்றாலும் ,....அதை களத்தோடு நிறுத்தினார். அவர் மனம் சிவன் நினைவிலே எப்பொழுதும்  கலந்திருந்தது. சிவனுக்காகவே,,,, சிவன் வாழும் தேசத்திற்காகவே காவலாக அடியார்களை காக்கும் காவலாளியாக தன்னை ஒரு அடியார் என்ற நோக்கிலே கருதி வாழ்ந்து வந்தார்.

 

அதே ஊரில் ஏனாதி நாதர் நடத்திவரும் கடிகையைப் போலவே, அதிசூரன்.. என்பவன் ஒரு கடிகையை நடத்தி வந்தான். ஆனால் , பல பேர் ஏனாதி நாதர் இடம் மட்டுமே... தேனில் மொய்க்கும் வண்டு போல, வாள் பயிற்சிகளை கற்று வந்தனர். இதனால், அதிசூரன் தன் கடிகையில் மாணவர் கூட்டம் இல்லாத நிலையில் ஏனாதி நாதர் மீது மிகவும் வஞ்சம் கொண்டு நெஞ்சத்தில் பகைமை கொண்டு வாழ்ந்து வந்தான்.




அதனால், அவன் ஏனாதிநாதரை அடிக்கடி சண்டைக்கு அழைப்பான். ஆனால் முடிவில் ஏனாதிநாதரே  வெல்வார். .. என்ன செய்வது என்று தெரியாமல், நெஞ்சில் வஞ்சகம் கொண்டு திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பான். 


வெல்லப்பட முடியாத ஏனாதி நாதரையே வென்றான் அதிசூரன்... எனும் ஒரு வெற்றி போதும் அந்த விளம்பரத்தில் தன் கடிகை பெரும் பெயர் பெறும் என நம்பினான்.


அதனால் , திட்டமிட்டு ஏனாதி நாதரை வாள் சண்டைக்கு அழைத்தான். (அதாவது கேரளாவில் பயிற்றுவிக்கப்படும் களரி என்ற யுத்தம் தான் அது) கூட்டத்தோடு வந்தால் தான் ஏனதியார் வீரன், தனியாக வந்தால் அவர் என்னிடம் வெல்ல முடியாது என சவால் விட்டு அவரை சண்டைக்கு இழுத்தான். ஏனாதியாரும்  அவனுடன் வாள் போட்டிக்கு ஒப்புக்கொண்டார்.


அன்று புரட்டாசி மாதம். உத்திராட நட்சத்திரம். அதிகாலையில், இருவரும் மோத தயாரானார்கள். மைதானத்தை சுற்றி மக்கள் கூட்டம் நிறைய பேர் இந்தப் போட்டியை காண ஆவலுடன் அமர்ந்திருந்தனர்.


ஏனாதிநாதரின் பலம் அவருடைய வீரம். அவருடைய பலவீனம் திருநீறு என்பதும் சிவத்தொண்டு என்பதும் அதிசூரனுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதனால், போட்டியில் வஞ்சகமாக வெல்ல சூழ்ச்சி செய்தான்.


வாளும் கேடயமும், மோதும் ஓசை கொல்லப்பட்டாரை... போல் ஒலித்துக் கொண்டே இருந்தது.! ஏனாதிநாதர் அவனை கொல்ல வேண்டும் என தாக்கவில்லை. அது தர்மமும் இல்லை. போட்டியினை, முறையாகவே வாளை பயன்படுத்திக்  கொண்டிருந்தார். 


ஏனாதி நாதர் தன் தாக்குதலை முடித்துக் கொண்டதும், அதிசூரன். தன்.. கேடயத்தை மெல்ல கீழே இறக்கினான். (வாள் சண்டையில் யதார்த்தமாக கேடயத்தை இறக்கும் ஒருவன். தாக்குதலுக்கு தயாராகிறான் எனப் பொருள்) அதனால், ஏனாதி நாதருக்கு அவன் மீது சந்தேகம் எழுந்தது. 


ஏனாதி நாதாரும் தன்னை, சுதாரித்துக் கொண்டு அதிசூரனை திரும்ப தாக்கும் சமயத்தில், அவன் நெற்றியில் இருந்து ஒளிபொருந்திய "திருநீறு மின்னீற்று" அதைக் கண்டதும், தன்னுடைய வாளை தளர்த்தினார்.


ஏனாதிநாதருக்கு அதிசூரனின் திட்டம் நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அவரின் சிவத்தொண்டு திருநீரை அணிந்த வரை தாக்கக்கூடாது என்ற எண்ணம், சிவனடியார்கள் உணவு கேட்பார்கள் உடை போன்றவற்றை கேட்பார்கள் இவனோ நமது உயிரைக் கேட்கிறான் ....என்று எண்ணி, அவர் வாளை தளர்த்திய நேரம்... அதிசூரன் அவன் எதிர்பார்த்த நேரம் வந்தது தெரிந்ததும் அவரை, வெட்டி  வீழ்த்தினான். அவன்,... தன்னை கொல்லவே திட்டமிட்டான் என்பது தெரிந்தும், சிவபெருமானின் திருநீற்றுக்காகவே தன் உயிரையும் அவர் அங்கு தந்தார். இறக்கும் சமயத்தில் அதிசூரனின் முகம் மகிழ்வதைக் கண்டார்..... திருநீறு அணிந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றினோம்....! என்ற மகிழ்ச்சியில்  ஏனாதி நாதரும் உயிரைத் துறந்தார்.


கூட்டமும் அதிசூரன் வீரத்தால் வெற்றி பெற்றான் என்று கொண்டாடியது. ஆனால் பக்தனின் பெயர் விளங்கவே இந் நாடகத்தை நடத்திய சிவன் கை விடுவாரா? பக்தனின் உண்மையை நிரூபிப்பதே தெய்வம் அல்லவா? பெரும் வெளிச்சமும் வாட்கள் மோதியது போன்ற மணியோசை முழங்க சிவபெருமான். "ரிஷப வாகனத்தில்"  தேவியோடு தோன்றினார். அவர் தோன்றிய அந்நேரமே,... உயிர் பெற்று எழுந்தார் ஏனாதி நாதர்.


'எம்பெருமனே' என சிவனை விழுந்து வணங்கினார் ஏனாதி நாதர்.


திருநீற்றின் பெருமை காக்க, திருநீறு அணிந்தோருக்கு எக்காலமும் வீழ்ச்சி இல்லை என்பதை  உலகுக்கு உணர்த்தவே இந்நாடகத்தை அரங்கேற்றினோம் . திருநீறு எனும் மிகப் பெரும் அடையாளத்தை எப்படி பூச வேண்டும் என்பதை உலகுக்கு சொன்னாய். இந்த உலக பாச கயிறு அறுத்தபின் ,,,"நீர் என்னோடு கைலாயம் வரக்கடவீர்" என பெருமாள் ஆசி வழங்கி மறைந்தார்.  வஞ்சகம் கொண்ட அதிசூரன் மிக அவலமாய் வாழ்ந்து செத்தான்.


கும்பகோணம் பக்கம் மருதாந்த நல்லூரில் அடுத்து இருக்கும் அந்த ஊரில் ஏனாதிநாதரும், அதிசூரனும், மோதியதும் இன்றும் இருக்கின்றது. இங்குள்ள ஆலயத்தின் சிவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


சிவனோடு, கலந்துவிட்ட ஏனாதி நாயனாருக்கு இங்கு தனி சன்னதி உண்டு. புரட்டாசி உத்திராடம் நட்சத்திரத்தில் அவர் வாழ்ந்து சமாதியான அந்த ஊரில் இன்றளவும் அந்த ஆலய சன்னிதானத்தில் ஏனாதிநாதருக்கு குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!

news

இறைவனின் இருப்பிடம்!

news

ஏனாதி நாயனார் வரலாறு.. 63 நாயன்மார்கள் வரலாறு!

news

Vrischikasana: வேதாவின் யோகா.. ரப்பர் மாதிரி வளையுறாங்களேய்யா.. முயன்றால் முடியாததே இல்லை

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்

news

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026...இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

news

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டசபை தேர்தல் 2026...காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

news

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்

news

Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்