சென்னை: முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏ.,வுமான செந்தில் பாலாஜி காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "தானும், தனது சகோதரரும் எங்கும் ஓடி ஒளியவில்லை" என்று அவர் அந்தக் கடிதத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தவெக எம்எல்ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடத்தி, அவர்களை விலைக்கு வாங்கி, அதன் மூலம் தவெக அரசை கவிழ்க்க சதி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும் படி செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரர் அசோக்கிற்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். இருந்தும் அவர்கள் விசாரணைக்கு ஆகாததால், அவர்கள் இருவருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றொரு அவரது சகோதரர் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு அடுத்தடுத்து சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காலை, மாலை இரு வேளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

செந்தில் பாலாஜி தரப்பில், போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் அண்மைக் காலமாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் குறித்து பல்வேறு ஊகங்களும் செய்திகளும் வெளியாகி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் தன் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், தங்களை எப்படி விசாரணைக்கு அழைக்க முடியும் என்றும், அவ்வாறு வழக்கு இல்லாதபோது தாங்கள் எப்படி விசாரணைக்கு ஆஜராக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"என் மீதோ அல்லது எனது சகோதரர் மீதோ ஆட்சிக் கவிழ்ப்பு விவகாரத்தில் முறையான வழக்குப் பதிவு செய்யப்படாத போது, விசாரணைக்கு ஆஜராகச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? சட்டப்படியான நடவடிக்கைகள் இல்லாத போது நாங்கள் எங்கும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை." என செந்தில் பாலாஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் இந்த கடிதம் வெளியானதும் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பல கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. "குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை, எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக தலைமறைவாக இருந்தீர்கள்? போலீசாருக்கு அனுப்பிய சம்மனுக்கு ஏன் விசாரணைக்கு ஆஜராகவில்லை? தவறே செய்யாதவர் எதற்காக முன்ஜாமீன் கேட்க வேண்டும்? போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி விட்டு, உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சட்டப்படி எதிர்கொண்டு, நீங்கள் குற்றமற்றவர் என்பதை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டியது தானே? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
Shanthi Chinnathambi Poem: இறைவா தருவாயா??
"முதல்ல உங்க கட்சியைக் காப்பாற்றும் வேலையை பாருங்கள்!" - எடப்பாடி பழனிச்சாமிக்கு தவெக பதிலடி
"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு செந்தில் பாலாஜி எழுதிய கடிதத்தால் பரபரப்பு!
"அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களை விஜய் களவாடுகிறார்!" – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
யாரையும் நாங்கள் அழைக்கவில்லை.. குதிரை பேர புகாருக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!
வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி
தேர்தலில் தனித்துப் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் தயார்: சிபிஐ திடீர் அறிவிப்பு!
அப்பா படம் ஜனநாயகன் வருது.. மகன் படம் சிக்மாவை ஆகஸ்ட்டுக்கு ஒத்திவைக்கும் லைகா?
தமிழகத்தில் நடப்பது அன்பு சாம்ராஜ்யம் - அமைச்சர் அருண்ராஜ் புகழாரம்
{{comments.comment}}