ஒலிம்பிக்கில் பதக்கம் தட்டிய.. இந்திய வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு!

Aug 16, 2024,05:09 PM IST

டெல்லி:  2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


பாரிஸில் நடந்த ஒலிம்பிக் ஆடவருக்கான  57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் வீரர் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் அமன் பெற்றுள்ளார். அரையிறுதியில் தோல்வியடைந்த அமன் 61.5 கிலோ எடை இருந்துள்ளார்  இது இவர் இருக்க வேண்டிய எடையை விட கிட்டதட்ட 4.6 கிலோ எடை அதிகமாகும். இந்த அதிகப்படியான எடையை 10 மணி நேரம் உடற்பயிற்சி செய்து குறைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியவர் இந்த அமன். 




அவர் பட்ட கஷ்டத்தின் பலனாக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக  அமனுக்கு இந்திய ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இது குறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷூ உபாத்யாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்த வீரரான அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையையும் புகழையும் கொண்டு சேர்த்துள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை பல லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறது என்றார்.


அதேபோல பதக்கம் வென்ற இன்னொரு வீரரான ஸ்வப்னில் குசேலுக்கும் ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரராவார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்