ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வென்று, அம்மாநிலத்தின் முதல் முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஒரு சுயேட்சை உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேந்தர் செளத்ரி என்பவர் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு பாஜக மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சிகளில் இருந்தவர் ஆவார்.

முதலில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்த சுரேந்தர் செளத்ரி பின்னர் அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். கடந்த ஜூலை மாதம்தான் இவர் அங்கிருந்து விலகி தேசிய மாநாட்டுக் கட்சிக்கு வந்தார். தற்போது துணை முதல்வராகியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இழுத்தடித்து வந்தது அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகமாக அமைந்து விட்டது. அதே சமயம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தரும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வாக்குறுதி அளித்து, அதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தை முன் வைத்தது அவர்களின் வெற்றிக்கு சாதமாக அமைந்து விட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லா, அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. பரூக் அப்துல்லா அவர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான தங்கை கனிமொழியை என் சார்பாகவும் கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம் என்றார் அவர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}