சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பஸ் இயக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் இருந்து தான் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி, பயணிகள் எளிதில் கிளாம்பாக்கம் அடையும் வசதி போன்றவற்றை செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 21ம் தேதி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு இன்று கூறுகையில், இன்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து செயல்படாது. கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது.
மக்களுடைய தேவை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும். தமிழக அரசிற்கு ஒத்துழைத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நல்ல உறவு நீடிக்கும். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்கள் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது. ஆம்னி பஸ்களுக்கு ஏற்றார் போல் கிளாம்பக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஆணையர் உத்தரவு
ஈசிஆர் ரோடு வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகளைத் தவிர்த்து, பிற ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. நகருக்குள் இந்த ஆம்னி பேருந்துகள் வரக் கூடாது என்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த புதிய மோதலால் வெளியூர்களுக்குப் போக ஆம்னி பேருந்துகளில் புக் செய்து வைத்துள்ள பயணிகள் குழப்பமும் கவலையும் அடைந்துள்ளனர்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}