சென்னை: வட கடலோர பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் உள்ள 5 முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து தற்போது 32.19 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. வட கிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஏரிகளின் நீர் இருப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நீடித்து வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகலில் வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் கண்ணன் கோட்டை ஆகிய ஐந்து ஏழில் நீர் நீர் இருப்பு 32.19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஏரிகளின் நீர் இருப்பு (சதவிகிதத்தில்):
அதன்படி செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தக் கொள்ளளவில் 31.82 சதவீதமும், புழல் ஏரியில் 62.88 சதவீதமும், பூண்டியில் 6.44 சதவீதமும், சோழவரத்தில் 5.73 சதவிகிதமும், கண்ணன் கோட்டையில் 58.4 சதவிகிதமும் நீர் இருப்பு உள்ளது.
குடிநீர் தேவைக்காக நீர் வெளியேற்றம்:
புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இதில் நீர் இருப்பு தற்போது 2075 மில்லியன் கன அடியாக உள்ளது. இதிலிருந்து குடிநீர் தேவைக்காக 184 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் 1081 கனஅடி கொள்ளளவு கொண்ட சோழபுரம் ஏரியில் 62 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொண்ட கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 292 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}