காபூல்: ஆப்கானிஸ்தானில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
முன்பு போல இப்போது இல்லை. பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பெண்கள் எல்லா விதத்திலும் சுதந்திரமாக தன்னிச்சையாக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு முன்னேறி உள்ளனர். அறிவு சார்ந்தும், தொழில் சார்ந்தும், கல்வி சார்ந்தும் அவர்கள் மிகப் பெரிய உயரத்தைத் தொட்டு கெத்தாக நிற்கின்றனர்.

வீடுகளில் தங்கள் பொறுப்புகளில் தலைமை வகிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். நாட்டிலும் நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர். ஆனால் சில நாடுகளில் இன்னும் பெண்களை அடக்கி வைக்கும் மோசமான பிற்போக்குவாதம் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒருநாடுதான் ஆப்கானிஸ்தான்.
தலிபான்களில் கையில் சிக்கித் தவித்து வரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்து வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி கற்க அங்கு தடை உள்ளது. வீட்டுக்கு வெளியே வேலை செய்யும் பெண்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு.
நாளுக்கு நாள் தடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறதே தவிர எதுவும் குறைந்தபாடாக இல்லை. அந்த வரிசையில் ஆப்கானிஸ்தானில் பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் வினோதமான ஒரு தடையை தற்போது தலிபான்கள் விதித்துள்ளனர். அதாவது, புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்களை வைக்க தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், பெண்கள் வீட்டு சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை ஆண்கள் பார்ப்பது அல்லது கிணற்றிலிருந்து தண்ணீர் சேகரிப்பதை பார்ப்பது குற்ற செயலாகும். இதனால் புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஜன்னல்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் இந்த உத்தரவை மீறும் வகையில் ஜன்னல்கள் இருந்தால், வீட்டின் உரிமையாளர் சுவர் எழுப்பியோ அல்லது பொருத்தமான உறைகளைப் பயன்படுத்தியோ தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அடப்பாவிகளா.. இப்படியெல்லாம் தடையாடா.. ஆப்கானிஸ்தான் எப்ப உருப்படப் போகுதோ!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
{{comments.comment}}