சென்னை: சென்னையிலிருந்து நெல்லை செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஒரு வழி சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இன்று இரவு இயக்கவுள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான இந்த ஒரு வழி சிறப்பு ரயிலானது, நெல்லைக்கு மட்டும் இயக்கப்படும். நெல்லையிலிருந்து சென்னைக்கு மறு மார்க்கத்தில் சிறப்பு ரயில் கிடையாது.

06083 என்ற எண்ணுடைய இந்த சிறப்பு ரயிலானது, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 19ம் தேதி அதாவது இன்று இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு மறு நாள் முற்பகல் 11.20 மணிக்கு நெல்லையை சென்றடையும். மொத்தம் 16 தூங்கும் வசதி மற்றும் 2 செகன்ட் கிளாஸ் லக்கேஜ் வசதியுடன் கூடிய ரயிலாக இது இயக்கப்படும்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று நெல்லையை வந்தடையும்.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}