பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்

Jun 25, 2025,05:41 PM IST

விழுப்புரம்: பாமகவில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் நிறுவனரான எனக்கே உண்டு. என்னுடன் இருக்கும் பாமக நிர்வாகிகளுக்கு தான் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அப்பா மகன் பிரச்சனை சீக்கிரம் சரியாகிவிடும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் கடந்த ஏப்ரல் மாதம் மோதல் உச்சத்திற்கு சென்றது. இந்தநிலையில், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்னர் பாமக தலைவர் பொறுப்பை தாமே எடுத்து கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.


அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்த ராமதாஸ், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளையும் மாற்றினார். இது ஒரு புறம் என்றால், மற்றொருபுறம் அன்புமணி மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டத்தை நடத்திவருகிறார்.இதனால், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




இந்தநிலையில், பாமகவில் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு. அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன். 


என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள். தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி எம்எல்ஏ அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்துள்ளோம். எப்போதும் என்னுடன் தான் இருப்பார். முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்