ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி... இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் அதிரடி உயர்வு!

May 07, 2025,11:51 AM IST

மும்பை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு காணப்பட்டது.


மே 7 அன்று பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரிலும் (PoK) இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடி தாக்குதலை இந்தியப் படைகள் நடத்தியுள்ளன. இதன் எதிரொலியாக பாதுகாப்புத் துறை பங்குகள் புதன்கிழமை உயர்வு கண்டன.


இந்த தாக்குதல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களின் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து அவற்றின் மதிப்பு உயர்ந்துள்ளது. Mazagon Dock Shipbuilders பங்கு மதிப்பு 1.92% உயர்ந்து ரூ.3,029.60 ஆக இருந்தது. Data Patterns (India) Ltd நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.56% உயர்ந்து ரூ.2,229 ஆக இருந்தது. இதேபோல Cochin Shipyard Ltd. நிறுவனத்தின் பங்கு 0.77% உயர்ந்து ரூ.1,494.10 ஆக இருந்தது. Hindustan Aeronautics Ltd. (HAL) நிறுவனத்தின் பங்கு 0.33% உயர்ந்து ரூ.4,522.00 ஆக இருந்தது. Bharat Dynamics Ltd. நிறுவனத்தின் பங்கு 0.10% உயர்ந்து ரூ.1,529.20 ஆக இருந்தது. இது முக்கியமான ஆயுதங்களை வழங்கும் நிறுவனம்.




மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வர்த்தக தொடக்கத்தில் ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து மீண்டு 150 புள்ளிகள் உயர்ந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டியிலும், 24,400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. வங்கி, பாதுகாப்பு மற்றும் வாகனத் துறை பங்குகள் இதற்கு உதவின.


ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத் துறை பங்குகள் ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எல்லைகளில் பதற்றம் அதிகரித்தால் பாதுகாப்புக்கான செலவுகள் கூடும். இதனால் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆர்டர்கள் கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

news

தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!

news

அதிவேக இணையத்தில் ஜப்பான் புதிய உலக சாதனை.. இந்தியாவை விட 16 மில்லியன் மடங்கு அதிகம்!

news

ஆட்சித்திறனுக்காக நோபல் பரிசு தந்தால் அதை எனக்குத் தரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்