சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திமுக அமைச்சரான பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (ஜனவரி 24, 2026) நேரில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் சேகர்பாபு சந்திப்பு என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பானது சென்னை கோட்டையில் உள்ள தமிழக சட்டசபையில், சபாநாயகர் அப்பாவு அவர்களின் அறையில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த ஆலோசனையில் இருவரும் மிக நெருக்கமாக உரையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திடீர் சந்திப்பிற்குப் பின்னால் பல அரசியல் காரணங்களை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ்ஸின் முக்கிய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், ஓபிஎஸ்ஸும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகவும், அதிமுக (எடப்பாடி அணி) மற்றும் பாஜக உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து திமுக தரப்புடன் ஆலோசித்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
டிடிவி தினகரன் மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளதாலும், செங்கோட்டையன் போன்றவர்கள் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்துவிட்டதாலும், ஓபிஎஸ் தற்போது ஒரு இக்கட்டான சூழலில் உள்ளார். இந்த இக்கட்டான சூழலில் திமுகவில் ஓபிஎஸ் இணைய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் சமீபத்தில் கூறி வந்த நிலையில், தை மாதத்திலேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை வீழ்த்த, ஓபிஎஸ் திமுகவின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறாரா அல்லது திமுக அவரை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் திட்டமிடுகிறதா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
மேலும், இந்தச் சந்திப்பு குறித்து ஓபிஎஸ் தரப்போ அல்லது அமைச்சர் சேகர்பாபு தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனச் சொல்லப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}