- பன்மொழிக் கவிஞர் க. முருகேஸ்வரி
கயத்திற்கு கரையில் அமர்ந்து ஒரு கடிதம்...
அன்புள்ள கயமே...
ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்கும்...
துள்ளிக் குதித்து குதியாட்டம் போடும் மீனும்....
அழகழகாய் மலர்ந்திருக்கும் அல்லியும்...
ஆங்காங்கே பூத்திருக்கும் தாமரையும்....
தரைக்கும் தண்ணிக்குமாய் தம்பட்டம் அடிக்கும் தவளையும்...
அழுக்குத் துணி துவைக்க வந்த அத்தையும்...

அத்தைக்கு ஒத்தாசை என்று வந்துவிட்டு
குழம்புக்கு மீன் பிடிக்க தூண்டில் போடும் மச்சானும்....
குதூகலமாய் குளித்துக் கும்மாளமிடும் குழந்தைகள் கூட்டமும்...
கலர் கலராய் தாவணி அணிந்து
குடத்தோடு குளத்துக்கு வரும் குமரிக்கூட்டமும்...
பூவையர்களை நோட்டமிட வட்டமிடும் இளவண்டுகளும்.....
படிக்கட்டுகளில் அமர்ந்து பட்டிமன்றம் பேசும் தாத்தா பாட்டிகளும்....
எப்படித்தான் மறந்தார்களோ...
எங்க ஊரு தாமரைக்குளமான உன்னை...
அல்லி படர்ந்த இடத்தில்
அழுக்கும் சேறும்....
குழந்தைகள் குளித்த குளத்தில்
குப்பையும் கூளங்களும்....
பளபளத்த படிக்கட்டு எங்கும்
பாசியும் தூசியும்...
கொக்கும் மீனும் கும்மாளமிட்ட குளத்தில்
கொசுக்களின் ரீங்காரமும்..
நெஞ்சு பொறுக்குதில்லையே....
ஊருக்கே அழகு சேர்த்த குளம்
இன்று அலங்கோலமாக...
தாமரைக்குளமே....
உன்னிடத்தில் நான் பார்த்து ரசித்த அனைத்துமே
என்னோடு முடிந்து போனதா...
அழகான நினைவுகளை அசைபோட
ஆசையாக ஓடி வந்தேனே...
நல்லவேளை நான் வந்தேன்
இதோ என் நண்பர்களோடு இணைந்து
பழையபடி உனை மாற்றுவேன்...
பால்யகால பசுமை நினைவுகளை
வரும் தலைமுறைக்கும் கடத்துவேன்...
இப்படிக்கு
இப்படிக்கு என்பதற்கு கீழே
எண்ணற்ற பெயர்கள் இடம்பெற அவா...
ஏனெனில் கயம் இன்றி அமையாது கிராமத்தின் பொழில்...
கயத்தினால் தழைத்தோங்கும் விவசாயத் தொழில்...
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}